மட்டக்களப்பு YMCA மற்றும் தைவான் YMCA ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், கதிரொளி மகளிர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் "தைவான் YMCA சேவைப் பரிமாற்றத் திட்டத்தின்" ஐந்தாவது நாள் நிகழ்வு இன்று (ஜூலை 20) கொத்தியாப்புலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்திட்டத்தின் ஐந்தாம் நாள் பணியாக, கொத்தியாப்புலை தாய் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிலையத்தை புனரமைக்கும் சமூகத் தொண்டுப் பணி முன்னெடுக்கப்பட்டது. நீண்ட நாட்களாக புனரமைப்புத் தேவையிலிருந்த இந்த மருத்துவ நிலையக் கட்டிடத்தை, இரு நாட்டு தன்னார்வத் தொண்டர்களும் ஒன்றிணைந்து தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மருத்துவ நிலைய வளாகம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, கட்டிடத்திற்குப் புதிய வர்ணங்கள் பூசப்பட்டன. சிகிச்சைக்காக வரும் தாய்மார்களும் குழந்தைகளும் மனமகிழும் வகையில், பிரகாசமான மற்றும் இனிமையானதொரு சூழலாக அது மாற்றியமைக்கப்பட்டது.
மேலும், இந்த மருத்துவ நிலையத்தின் நீண்ட நாள் தேவையாக இருந்த கழிப்பறை வசதிக்கான நீர் விநியோகக் கட்டமைப்பும் இத்தன்னார்வத் தொண்டர்களால் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டது. இச்செயற்பாடு அப்பகுதி மக்களுக்கு ஒரு நீடித்த பயனை அளிக்கும் முக்கிய திட்டமாக அமைந்துள்ளது.
மக்களுக்கான சேவையின் ஊடாக நட்பு, இரக்கம் மற்றும் மனிதநேயப் பாலங்களைத் தொடர்ந்து கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இளைஞர் சேவைப் பரிமாற்றத் திட்டம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)


.jpeg)






