மட்டக்களப்பு | கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான டைக்வாண்டோ (Taekwondo) போட்டிகள் மட்டக்களப்பு வெபர் உள்ளரங்க விளையாட்டரங்கில் மூன்று நாட்களாக நடைபெற்று (19) ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
இதில் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த BT/BC அன்-நூர் தேசியப் பாடசாலை மாணவன் M.R. Riyathi, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (Under-18) 63–68 கிலோ எடைப் பிரிவில் சிறப்பாகப் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மாகாண மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவன் பெற்ற இந்த வெற்றி, அன்-நூர் தேசியப் பாடசாலைக்கும் ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
மாணவனின் இந்த சாதனைக்கு பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் திரு. ஆர். அலோஜிதன் அவர்களின் வழிகாட்டலும், பயிற்றுவிப்பாளர்களான திரு. ஜெ. கிருஷ்ணா மற்றும் திரு. ஆர். நிரோசன் ஆகியோரின் பயிற்சிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
.jpeg)






