( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு
ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில், சித்தருள் சித்தர் ஸ்ரீ
சித்தானைக்குட்டி சுவாமியின் பவள விழா குருபூசையும் அன்னதானமும் நாளை 22ஆம்
திகதி (புதன்கிழமை) சிறப்பாக நடைபெறவுள்ளது.
நாளை காலை 6.00 மணிக்கு பாற்குடப் பவனியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
இதனைத்
தொடர்ந்து காரையடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்ப பூஜை இடம்பெற்று,
அங்கிருந்து பக்தர்கள் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்திற்கு பாற்குடம்
எடுத்துச் செல்லவுள்ளனர்.
காலை 10.00 மணிக்கு புத்தக மற்றும் பாமாலை இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நண்பகல் 12.00 மணிக்கு பவளவிழா குருபூசை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறும்.
பகல் 1.00 மணிக்கு வருகை தரும் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
மாலை 4.00 மணிக்கு கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு திருவிளக்குப் பூஜையும் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நவீன நாட்டுக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
இந்த
ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்வுகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்
பெருமளவில் கலந்து கொண்டு குருவருளைப் பெறுமாறு ஸ்ரீ சித்தானைக்குட்டி
சுவாமி சமாதி ஆலய பரிபாலன சபை அழைப்பு விடுத்துள்ளது.








