
SIVAKUMAR.M
முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் - 2026 மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின்கீழ் இயங்கும் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஊடாக அமுல்படுத்தப்படுவதுடன் இவ்வாரம் குறிப்பாக சிறார்களின் உடல்,உள-சமூக மற்றும் அறிவுசார் விருத்தியுடன் கூடிய இலங்கைச் சிறுவர் தலைமுறையொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜூலை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதி, “முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம்” அமைச்சரவை அங்கீகாரத்தின் பேரில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் 2026ஆம் ஆண்டிற்கான "வியத்தகு சிறுவர் உலகிற்கு ஒளி விளக்காகும் அன்பான குடும்பம்"எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது அதன்பிரகாரம்,
மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக சேவையாற்றுகின்ற அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் 2026.07.17 காலை இடம் பெற்றது .
மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து மௌன இறைவணக்கதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட இணைப்பாளர் ECCD திரு.வீ. முரளிதரன் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தினார் .
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தியதோடு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் முன்பிள்ளைப்பருவ அபிலிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான அளிக்கையினை மாவட்ட இணைப்பாளரால் நிகழ்த்தப்பட்டது .
தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதிபணிப்பாளர் வைத்தியர் K. மோகனகுமார் அவர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பான சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உளநலம் என்பவற்றின். முக்கியத்துவம் பற்றி விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
அதன் பின் பங்குபற்றியவர்களின் கலந்துரையாடலுடன் நிகழ்வு நிறைவு பெற்றது




































