பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்!



( வி.ரி.சகாதேவராஜா)
கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த  மூன்றாவது யாத்திரீகர்  நேற்று (13)  திங்கட்கிழமை காலை திடீரென மரணமானார்.
 
இச்சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை எனும் இடத்தில் இடம் பெற்று இருக்கிறது .

ஏறாவூர் களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே.பாக்கியராசா( வயது52)என்பவரே இவ் விதம் மரணமான மூன்றாவது யாத்திரீகர் ஆவார்.

மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மருமகனாவார்.
 
இவரது பிரேதம் தற்சமயம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது .

இவரை லாகுகலை  பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் பார்வையிட்டார்

இதேவேளை பாதயாத்திரையின் போது நேற்று முன்தினம் …