மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலை கிரிக்கெட் மற்றும் விவாதக் குழு மாணவர்களுக்கான விசேட கௌரவிப்பு விழா

 

































































SIVAKUMAR M



கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய கல்லூரி மற்றும் திருகோணமலை இந்து கல்லூரி ஆகிய இரு பெரும் பாடசாலைகளுக்கு இடையிலான 31ஆவது 'பொன் அணிகளின் சமர்' கிரிக்கெட்  போட்டி கடந்த 2026.07.04 அன்று திருகோணமலை இந்து கல்லூரி மைதானத்தில் மிக  நடைபெற்றது.

இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய சிவாநந்தா அணி, 49 ஓவர்களில் 247 ஓட்டங்களைக் குவித்தது. தொடர்ந்து பதிலளித்தாடிய திருகோணமலை இந்து கல்லூரியை விட 32 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்று, சிவாநந்தா தேசிய கல்லூரி சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் இரு பாடசாலைகளுக்கும் இடையே 31 ஆண்டுகளாக இந்த பொன் அணிகளின் சமர் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. இப்போட்டிக்கு முன்னதாக இரு அணிகளும்  15 க்கு 15  வெற்றிகளுடன் சமநிலையில் இருந்தன. ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தீர்க்கமான ஆட்டத்தில் சிவாநந்தா அணி வெற்றி வாகை சூடியதுடன், தொடர்ச்சியாக 3ஆவது வருடமாகவும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து, அந்தப் பெருமதிப்புமிக்க வெற்றிக்கிண்ணத்தை நிரந்தரமாகத் தன்வசப்படுத்திக் கொண்டது.

சிவாநந்தா அணியின் இந்த  சாதனைக்கு, மாணவர்களைத் திறம்படப் பயிற்றுவித்து, முறையான வியூகங்களுடன் நெறிப்படுத்திய பயிற்றுவிப்பாளர் திரு. தில்லைநாயகம் கிஷாந்த் அவர்களின் அர்ப்பணிப்பும்,  அணியை மைதானத்தில் திறம்பட வழிநடத்தி, ஓட்டங்களைக் குவிக்க வீரர்களை உற்சாகப்படுத்திய அணித்தலைவர் தயாபரன் கவிஷன் அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் முக்கிய காரணங்களாக அமைந்தன.

 வெற்றியை ஈட்டி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த கிரிக்கெட் அணியின் 11 வீரர்களுக்கும், அண்மையில் நடைபெற்ற விவாதப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டி கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்றைய தினம் (2026.07.06) பாடசாலை மண்டபத்தில் மிக   சிறப்பாக     நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. S. தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாதனை படைத்த மாணவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக தாழங்குடா கல்வியற்கல்லூரி விரிவுரையாளரும் ‘உதவும் கரங்கள்’ அமைப்பின் தலைவருமான திரு. S. ஜெயராஜா, ஓய்வுநிலை அதிபர் திருமதி H. திலகவதி, பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுச் செயலாளர் திரு. S. ரவீந்திரன் மற்றும் பழைய மாணவர் சங்க உப செயலாளர் திரு. G. முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பித்தனர்.

வருகை தந்திருந்த அதிதிகளால் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் , விளையாட்டில் மட்டுமல்ல விவாதத்திலும் நாம் சளைத்தவர்கள் என்று வென்று காட்டிய விவாத அணியினரான . அட்ஷரன் , . ஷதுஷன் , பி. அகிலேஷ் மற்றும் ஜே. யோபு ஆகியோருக்கும் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டதுடன் பொறுப்பாசிரியர் திருமதி ..சிந்துஜன் அவர்களும் பாராட்டப்பட்டார்