மாகாண மட்ட சதுரங்கப் போட்டி 2026: கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய மாணவன் சிவலிங்கம் சகஸ்ரன் முதலிடம் பெற்று சாதனை!

 

 

 

 




  SIVAKUMAR.M

 

  இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில், மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் சிவலிங்கம் சகஸ்ரன் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இம்மாணவன், தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளார். சாதனை படைத்த மாணவனுக்கு பதக்கமும் (Medal) சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மாணவன் சிவலிங்கம் சகஸ்ரனின் இந்த  சிறப்புமிக்க வெற்றிக்கு, அவருக்கு சிறந்த முறையில் வழிநடத்தல்களையும் பயிற்சிகளையும் வழங்கிய சதுரங்கப் பயிற்றுவிப்பாளர் (Coach) ரினோஷன் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையே முக்கிய காரணமாகும்.

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் சிவலிங்கம் சகஸ்ரனுக்கும், அவரை வழிநடத்திய பயிற்றுவிப்பாளர் ரினோஷன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம், பெற்றோர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.