பிரம்மாண்ட நிதி மோசடியில் பிரபல ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ (House Of Fashion) நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

  

 


 

பொருட்களை இறக்குமதி செய்வதாகப் போலியான ஆவணங்களைக் காட்டி, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்திய பிரம்மாண்ட நிதி மோசடியில் பிரபல ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ (House Of Fashion) நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய 21 முன்னணி நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 'A.Y. Investment' நிறுவனத்தின் பணிப்பாளரான ஃபெஸ்லி முகமது என்ற முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பெருந்தொகையான டொலர்கள், 20 கோடி ரூபா மதிப்பிலான சொகுசு வாகனம் மற்றும் தங்கம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. வங்கி கணக்குகளைப் பரிசோதித்ததில் 10,156 சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கான எந்தப் பொருட்களும் நாட்டிற்குள் வரவில்லை என சுங்கப் பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் மாதம் 6-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.