முன்னாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து
வைப்பதையோ தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள ரிட்
(Writ) மனு தொடர்பான விசாரணையை பார்வையிடுவதற்காக இன்று (23)
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
குறித்த மனு தொடர்பான மேலதிக பரிசீலனையை இன்று மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த
மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும்
நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் அமர்வு
முன்னிலையில் கடந்த ஜூலை 9 முதல் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
அன்றைய
தினம் தொடர்ந்து நான்காவது நாளாக விசாரணை இடம்பெற்ற நிலையில், மேலதிக
பரிசீலனைக்காக வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மனு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் இன்று நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.