டெங்கு பரவல் காரணமாக மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல் .

 




டெங்கு பரவல் அதிகரிப்பு காரணமாக மொரட்டுவைப் பல்கலைக்கழகம் எதிர்வரும் (ஜூலை 21)ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
வளாகத்திற்குள் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதுவரை பல்கலைக்கழகத்திற்குள் 50க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிருவாகம் மேலும் தெரிவித்துள்ளது