எதிர்க்கட்சியினர் ஒன்றுதிரண்ட போதிலும் நாட்டின் மக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடனே இருக்கிறார்கள் என ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்குகளில் இருந்தும் சட்ட நடவடிக்கைகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படக் கூடும் எனக் குறிப்பிட்ட அவர், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தலைவர்கள் புதிதாக ஒன்றிணையவில்லை என்றும், கடந்த காலங்களிலும் அவர்கள் இணைந்தே செயற்பட்டதால் இதனால் அரசாங்கத்திற்கு எந்தச் சவாலும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் நகர்வுகளால் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காமல் முன்னோக்கி வைக்கும் அடியை தொடர்ந்து முன்வைக்கும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்





