Peace and Humanity அமைப்பின் மாவட்டக் காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
















சர்வதேச Peace and Humanity அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட காரியாலயமானது Peace and Humanity அமைப்பின் இலங்கைக்கான தலைவர் பேராசிரியர் கலாநிதி இர்ஷாட் அகமட் அவர்களினால் மட்டக்களப்பு மன்ரேசா வீதியில் அமைந்துள்ள EREEDO தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் நேற்று 20.07.2026 திறந்து வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வில் Peace and Humanity அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட பணிப்பாளர் எந்திரி. தயாளசீலன் மயூரன் (J.P), மாவட்ட இனைப்பாளர் கலாநிதி.நித்தியானந்தராஜா அனிஸ்டன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சமாதான தூதுவர்கள் கலாநிதி.குணசீலன் சதீஸ்குமார், திருமதி சுதர்ஷினி பிரசன்னா, புத்தளம் மாவட்டத்திற்கான சமாதான தூதுவர் A.R.அப்துல் முகாட், EREEDO தொழிற்பயிற்சி நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். 

குறித்த நிகழ்வில் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதை  தொடர்ந்து Peace and Humanity சர்வதேச அமைப்பினால்  வழங்கப்படும் சமாதான தூதுவர், மனிதநேயம், சமாதானம், ஒப்பீட்டு சமயக் கல்விகள், நீதி, மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிகள் போன்ற மேலும் பல பயிற்சி நெறிகளை வழங்கி சான்றிதழ் வழங்குவதற்கான தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரமும் EREEDO தொழிற்பயிற்சி நிலையத்துக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.