முச்சக்கர வண்டியொன்று நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 


முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் இரு முதியவர்களும் இரண்டு சிறுவர்களும் பயணித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

காயமடைந்த இரு சிறுவர்களும் தற்போது பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.