க.டினேஸ்
சுமார் 1.60 கிலோமீட்டர் நீளம் கொண்ட இவ்வீதியின் ஒரு பகுதி முற்றிலும் போக்குவரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் சேதமடைந்துள்ளது. இதனால் நாள்தோறும் இவ்வீதியைப் பயன்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.
பாடசாலை மாணவர்கள், நாளாந்தம் ஆலயத்திற்குச் செல்லும் வழிபாட்டாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
நாள்தோறும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் முக்கிய வீதியாக இது இருந்தபோதிலும், இதன் தற்போதைய நிலை ஆபத்தானதாக மாறியுள்ளது.
இவ்வீதியின் அவல நிலை குறித்து ஏற்கனவே பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாணவர்களினதும் பொதுமக்களினதும் நன்மையைக் கருத்திற் கொண்டு, பழுதடைந்துள்ள இத்தேவாலய வீதியை உடனடியாகப் புனரமைக்க உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.










