இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்றை இயக்கும் சவாலான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
M5 வகுப்புக்கு சொந்தமான 781 இலக்க புகையிரத எஞ்சினே இவ்வாறு வீதி வழியாக கண்டியிலிருந்து பேராதனை நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையின் மூலம், இலங்கையின் பொது வீதி ஒன்றில் உள்ள பாலம் ஒன்றின் வழியாகவும், நாட்டின் மிக நீளமான “மகாவலி கங்கை” (Mahaweli River) ஆற்றைக் கடந்து செல்லும் முதலாவது புகையிரத எஞ்சின் என்ற வரலாற்றுப் பெருமையை இந்த M5 781 எஞ்சின் பெறவுள்ளது.
இதற்கான விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





