ஹோமாகம கட்டுவான தொழில்பேட்டையில் உள்ள தலைக்கவச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து நேற்று (21) காலை 09:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
3
மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளதுடன், ஆரம்பத்தில் மூன்று நபர்கள்
தீயில் சிக்கியதாக கூறப்பட்ட போதிலும், மேற்கொள்ளப்பட்ட தேடுதல்
நடவடிக்கையின் போது தீயில் கருகிய நிலையில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
அவர்களில் மூவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது இந்த தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரின் படங்கள் வெளியாகியுள்ளன, இதில் ஒரு யுவதியும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
எவ்வளவு
கனவுகளோடு உழைக்கச் சென்ற இடத்தில் தீ விபத்தில் கருகி உயிரிழந்த ஐந்து
பேரின் உயிரிழப்பு இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.