வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

 


வியட்நாம், பெலிஸ் (Belize) மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச நிதி நிறுவனம் (International Finance Corporation - IFC) தெரிவித்துள்ளது.

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டு உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது அதிவேக முன்னேற்றத்தைக் காட்டி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அந்நிறுவனம், வெற்றிகரமான கடன் மறுசீரமைப்புச் செயல்முறைக்குப் பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த இலங்கை உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையை உயர்த்தியதன் விளைவாக, இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகள் தொடர்பான புள்ளிகள் 2025 இல் 37.33 ஆக இருந்த நிலையில், 2026 இல் 43.67 ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், வளர்ந்து வரும் 57 பொருளாதார நாடுகளின் பட்டியலில் முன்னணிப் பிரிவிற்குள் (Top Tier) நுழைய இலங்கை வெற்றி பெற்றுள்ளது.