பூரண
இரத்தப் பரிசோதனைக்கு (Full Blood Count) அரசு நிர்ணயித்த உச்சக் கட்டணமான
400 ரூபாவிற்குப் பதிலாக 550 ரூபாவை அறவிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள தனியார்
மருத்துவமனை ஒன்றிற்கு 30 இலட்சம் ரூபா அபராதம் விதித்து யாழ்ப்பாணம்
நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் சேவை அதிகார சபையினால்
கடந்த ஜூலை 13 ஆம் திகதி குறித்த தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட
சோதனையைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கிலேயே, ஜூலை 21 ஆம் திகதி நீதிமன்றம்
இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.





