மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் கரும் புலி நடமாட்டம் உள்ளதை கண்ட மக்கள் பீதியில் உள்ளனர்.
அப் பகுதியில் காலை நேரங்களில் புலிகளைக் காணக் கூடியதாக உள்ளது எனவும் ,கடந்த சில மாதங்களாக தோட்ட பகுதியில் வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகள் காணாமல் போய் உள்ளது எனவும் புரவுன்ஷீக் தோட்டத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப் பகுதி மக்கள் நல்லத்தண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள்
மற்றும் உயர் வன பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்