ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவின் பொன்விழாவானது மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
11 ஆவது தாழங்குடா பிறிமியர் லீக் (TPL) மென்பந்து சுற்றுப்போட்டியுடன் இணைந்த மாணவர்கள் கௌரவிப்பு வைபவத்தின் ஆரம்ப நிகழ்வாக பொன்விழா ஊர்வலத்துடன் போட்டிகள் அனைத்தும் இன்று ( 01:03:2026 ) ஞாயிறு காலை கழகத் தலைவர் வ.பிராபாகரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.
மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன், கொடியேற்றுதல், தேசியகீதத்துடன் ஆரம்பமான நிகழ்வின் பிரதானமாக ஸீப்ரா விளையாட்டுக் கழக வீதி பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து ஊர்வலம் இடம்பெற்றதுடன் அதனையடுத்து போட்டிகள் ஆரம்பமாயின.
Thalankudah Warrior, Eleven kings, Kennedy, Zebra lions மற்றும் Green Knigtsஆகிய ஐந்து அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் மென்பந்துச் சுற்றுப்போட்டியில் பங்குபெறுகின்றனர்.
தாழங்குடா கிராமத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வான இப் போட்டிகளின் இறுதிச் சுற்று நாளை இடம்பெறுவதுடன், அதனைத் தொடர்ந்து பரீட்சையில் சித்திபெற்ற பாடசாலை, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான
கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளன.










