சிவகுமார் .M
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஸ்தாபகருமான அமரர் செல்லையா இராஜதுரை அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 27.07.2026 (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில், மாநகர முதல்வர் திரு. சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக, தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த அமரர் செல்லையா இராஜதுரை அவர்களின் மகன், மகள் மற்றும் பேத்தி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. ஸ்ரீநாத், ஞா. ஸ்ரீநேசன், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கென்னடி, பேராசிரியர் சீவரெத்தினம் மாநகரசபை ஆணையாளர், ,மாநகரசபை உறுப்பினர்கள் , உத்தியோகத்தர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், அன்னாரின் உறவினர்கள், நலவிரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அன்னாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.























































