மட்டக்களப்பு தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.


 
















































































ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவின் பொன்விழாவும் 11 ஆவது தாழங்குடா பிறிமியர் லீக் (TPL) மென்பந்து சுற்றுப்போட்டியும் 01:03:2026 ஞாயிறு, 02:03:2026 திங்கள் கிழமைகளில் கழகத் தலைவர் வ.பிரபாகரன்  தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வுகளின் நிறைவாக பரிசளிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனைப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கா.செந்தில்குமார் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் Green Knigts அணியினர் வெற்றி பெற்று முதல் இடத்தையும் Kennedy அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், சிறப்பான வீரர்களுக்கான கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வின் பிரதான அங்கமாக பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இதில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் தாழங்குடா கிராமத்தில் இருந்து வைத்தியராக சாதனை படைத்த மருத்துவர் மகேந்திரராஜா கிருஷ்ணா அவர்களுக்கும் கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கான கௌரவம் விளையாட்டுக் கழகத்தினரால் சிறப்பாக வழங்கப்பட்டன. இறுதியாக செயலாளரது நன்றியுரையுடன் நிகழ்வானது நிறைவுபெற்றது.