கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண்முனைபற்றில் வீதி புனரமைப்பு.

 

































மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் 449மீட்டர் வீதிகள் காங்கிரீட் வீதிகளாக 2026 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 15 மில்லியன் ரூபாய் கிராமிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் நிதி உதவியினால் இன்று 03.08.2026 மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு கந்தசாமி பிரபு அவர்களினால் வீதிக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது செல்வா நகர் கிழக்கு தீர்த்தக்கரை குறுக்கு வீதி, 6 மில்லியன் ரூபாய்…பாலமுனை முகம்மது லெப்பை வீதி 4 மில்லியன் ரூபாய், தாழங்குடா பொன்னம்பலம் குறுக்கு வீதி 5 மில்லியன் ரூபாய், பெறுமதியான அபிவிருத்தி திட்ட வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர், பிரதேச செயலாளர் பிரஜாசக்தி குழு உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.