மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் களை கட்டிய உழவர் திருநாள் பெருவிழா .2026.02.25


 











































































மட்டக்களப்பு மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்   திருமதி லக்ஷன்யா பிரசாந்தன்   தலைமையில்  உழவர் திருநாள்  இன்றைய  தினம்  2026.02.25 பிரதேச செயலக முற்றத்தில் இடம் பெற்றது. 

  பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக  கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பல உத்தியோகத்தர்களும்  விழாவில் கலந்து சிறப்பித்தனர் .


இந்நிகழ்வில்  பிரதேச செயலகத்தில் செயல்படும்  ஒன்பது      கிளைக்குமென தனித்தனி பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு அக்கிளைகளில் பணி  புரியும் உத்தியோகத்தவர்களால் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டமை    குறிப்பிடத்தக்கது.
உழவர் திருநாள் நிகழ்வின்போது  போது வரவேற்பு நடனம் , கிராமிய  பாடல், கிராமிய நடனம்  என பல்வேறு நிகழ்வுகளும் கலாச்சார பிரிவினரால்  நடத்தப்பட்டன .
கலாசார நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு உதவி பிரதேச செயலாளர்   திருமதி லக்ஷன்யா பிரசாந்தன் , கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி தலைமை முகாமையாளர் ஆகியோரால் பரிசுகள் வழங்கப்பட்டன .

செயலகத்தில் பணி  புரியும் உத்தியோகத்தர்கள் உட்பல பொது மக்களும் உழவர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

 

 EDITOR