மட்டக்களப்பு,
செங்கலடி - ஐயன்கேணி பகுதியில் அமைந்துள்ள 'பரலோக தரிசன எழுப்புதல்
அறுவடைச் சபை' (Heavenly Vision Revival Harvest Church) புதிய ஆலயத்
திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிறிநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன்போது
உரையாற்றிய அவர், தமிழ் மக்களிடையே பலமான ஒற்றுமை நிலவ வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார். சமூகத்தில் நிலவ வேண்டிய அமைதி மற்றும்
நல்லிணக்கம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ் சமூகம் ஒருமித்த
கருத்துடன் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இன்றைய
நிகழ்வில் சுயாதீன போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட
போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போதகர்கள்,
திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர்
கலந்துகொண்டனர்.










