
மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட வறுமையிலும் திறமையான மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி, வக்கர் மாவடி வீதி, சீதேவி லகூண் வியூ மண்டபத்தில்கல்லடியில் இன்று இடம்பெற்றது
11-மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது .
பொறியியல் துறை மாணவர்கள் 07-பேருக்கும் மருத்துவத்துறை மாணவர்கள் 04- பேரும் புலமை பரிசை பெற்றுக்கொண்டார்கள்
கடந்த 25 ஆண்டுகளாக கல்விக்கு பல சேவைகளை ஆற்றிவரும் சங்கரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சுகுமார் ஒழுங்கமைப்பில் கல்குடா வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருள் ராஜா, வைத்தியர் தட்சாயினி, உட்பட சங்கரவேல் பவுண்டேசன் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சங்கரவேல் பவுண்டேசன் அமைப்பு வடக்கு கிழக்கில் வறுமையிலும் திறமையான மாணவர்களை தெரிவு செய்து மாதாந்தம் புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதுவரை 129 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வறுமையிலும் திறமையானவர்களாக, கடினமான சூழலில் வாடினாலும், கல்வியிலும் மற்ற திறமைகளிலும் சிறந்து விளங்கும் பல மாணவர்கள் உள்ளனர்
. இவர்கள் பொருளாதார பற்றாக்குறையையும் தாண்டி, தங்களின் திறமையால் சாதனைகள் படைக்கின்றனர். இத்தகைய திறமையானவர்களுக்குக் ஊக்கத்தொகைகள் வழங்கி உதவுவது கல்வியில் முன்னேற அவர்களுக்கு முக்கிய உந்துசக்தியாக அமைகிறது.

























































































