இலங்கைக்கு எல்-நினோ பேரச்சுறுத்தலாகுமா?


 

கிருபா இராஜரெட்ணம்
சிரேஸ்ட விவுரையாளர்
புவியியற்றுறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
2026.07.04


 

 

 

சமகால உலகில் எல்நினோ செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது பற்றி சமூக ஊடகங்களில் பலதையும் பத்தையும் எழுதி இலங்கை வாழ் சமூகத்தை பேரச்சுறுத்தலுக்குள் வைத்திருக்கும் கருத்துக்களை மறுத்தே ஆக வேண்டும். எல்-நினோவின் தாக்கம் உலகத்துக்கு உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனுடைய விளைவுகள் நீண்ட வரட்சி, வெப்ப அலை, வெள்ளம், புயல் போன்ற அனத்தங்களோடு தொடபுபட்டது. ஆனால் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த நாடுகளுக்கெல்லாம் விளைவுகள் ஒரேமாதியாக இருக்காது. நாட்டுக்கு நாடு அதனுடைய தாக்கம் வேறுபடுகின்ற அதேவேளை வெவ்வேறு வடிவங்களையும் கொண்டிருக்கும். ஆகவே மக்கள் துறைசாந்த நிபுணகள், மற்றும் துறைசாH நிறுவனங்களின் ஆலோசனைகளை மட்டும் கருத்திற் கொள்ளுங்கள், செவிமடுத்துச் செயற்படுங்கள். 
எல்-நினோ ஒரு குறுகிய கால வானிலை சுழற்சி
பொதுவாக நாம் அனுபவிக்கின்ற வானிலை மாறுபாடுகள் (Weather anomalies) இரண்டு வேறுபட்ட கருத்தியல்களுக்கு ஊடாகப் புந்துகொள்ள வேண்டும். ஓன்று, காலநிலை மாற்றம்; (Climate change) இது நீண்டகால தாக்கத்தைக் கொண்ட ஒரு வளிமண்டலச் செயன்முறையாகும். மற்றயது காலநிலை வேறுபாடு (Climate Variability). இது, குறுகிய கால வானிலை சுழற்சி (Short-term weather Cycle). இது இயல்பாக ஏற்படுகின்ற வானிசை; சுற்றொழுங்கு. அந்தவகையில், எல்நினோவும் சில கால இடைவெளியில் குறுகிய மாதங்கள் தொடருகின்ற வளிமண்டல சுற்றோட்டப் பாங்கு. இது மத்திய கோட்டை அண்டி பசுபிக் சமுத்திரத்தின் மத்திய, மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் நிலைகொண்டு விருத்தியடைகின்றது. இது இன்று நேற்று அறிமுகமான ஒன்றல்ல, காலநிலை மாற்றம் என்ற கருத்தியல் நிலைபெறுவதற்கு முன்பிருந்தே இடம்பெற்று வருகின்ற ஒரு சமுத்திர-வளிமண்டலச் சுற்றோட்டமாகும் (படம்-01).
எல்-நினோ உருவாக்கம்
எல்நினோவின் உருவாக்கத்துடன் பிரதானமான நான்கு அடிப்படை நிலைமைகள் செல்வாக்கப் பெற்றுள்ளன. அவை, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, வியாபாரக் காற்றுக்கள், பெரூவியன் குளிர் நீரோட்டம், நீன் மேலெழுச்சி ஆகியனவற்றில் ஏற்படும் வழமைக்கு மாறான வேறுபாடுகள் போன்றவற்றால்  எல்நினோவுக்கான அடிப்படை நிலைமை உருவாகின்றது. சடுதியாக மாறும் இந்நிலைமைகள் பூகோள வளிமண்டல சுற்றோட்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சக்தி மிக்க சுற்றோட்டமாக மாற்றமடைந்து, உலக பிராந்தியங்களில் வேறுபட்ட விளைவுகளைக் கட்டவிழ்துவிடக் காணரணமாகின்றது. ஒவ்வொரு 02 தொடக்கம் 07 வருட இடைவெளிகளில் இவை தோன்றுகின்றன. எல்-நினோ என்பது என்ன?  “பசுபிக் கடல் பிராந்தியத்தில் பேரு நாட்டுக் கரையோரமாக வழமைக்கு மாறாக சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை சராசரி நிலைமைக்கு மேல் எழுச்சியடையும் போது உருவாகும் அசாதாரண வளிமண்டல சற்றோட்டத்தை எல்-நினோ என அழைக்கலாம்” இதனை RONI (Relative Oceanic Nino Index) குறிகாட்டியை அடிப்படையாகக் கொண்டு 4 விதமாக வகைப்படுத்தியுள்ளனர். அந்த அடிப்படையில் 2026/2027 இல் உருவாகியிருக்கின்ற எல்-நினோ அதனுடைய வகைப்பாட்டில் சமுத்திர மேற்பரப்பு சராசரி வெப்பநிலையைவிட 2oC க்கும் மேல் வெப்பநிலையைப் பிரதிபலிக்கும் இறுதி வடிவத்தை எட்டியுள்ளதனால் அதுவே இன்று பிரதானமான பேசுபொருளாக “Sper El-Nino” என்று அழைக்கப்படுகின்றது. இதனையொத்த நிலைமை 150 ஆண்டுகளுக்கு முன் 1876 இல் உருவாகி உலகில் பேரழிவைத் தோற்றுவித்த மிக மோசமான பதிவு காணப்படுகின்றது. 1950 களுக்குப் பின்னர் பதிவான 16 எல்-நினோக்களில், 1972/73, 1982/83, 1997/98, 2015/16 ஆகிய ஆண்டுகளில் உருவான 04 எல்-நினோக்கள் Sper El-Nino வகையைச் சாந்ததாக பதிவான போதிலும் 1876 இல் உருவான நிலையை அவை எட்டவில்லை. 2026 ஆம் ஆண்டு உருவாகியுள்ள எல்-நினோ அதனையும் விஞ்சிய நிலைக்கு செல்லலாம் என காலநிலையியலாளகள் எதிவு கூறியுள்ளனர். எல்-நினோவின் பொதுவான பிரதிபலிப்புகள், மற்றும் இயல்புகளைப் பாக்கின்ற பொழுது,
1.வழமைக்கு மாறாக சராசரி சமுத்திர வெப்பநிலை உயவடைதல்,
2.நீரோட்ட  ஒழுங்குகளில் மாற்றம் ஏற்படுதல்.
3.பூகோள வானிலை ஒழுங்கு மாற்றமடைதல்.
4.பருவக் காற்றுச் சுற்றோட்டம் பலவீனமடைந்து காணப்படும்.
5.பிராந்திய அடிப்படையில் வெப்ப அலைத் தாக்கம், வெள்ளம், வரடச்சி, புயல் தீவிரமடைந்து காணப்படும்
6.விவசாயம், மீன்பிடி, நீர் வழங்கலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
7.2-7 ஆண்டுகளுக்கு ஒரு தடைவ பசுபிக் சமுத்திரத்தில் தோன்றும்.
8.பசுபிக் சமுத்திர காலநிலைச் சுற்றோட்டமான ENSO (El-Nino Southern Oscillation)  இல் எல்-நினோ ஒரு பகுதியகும்.
Sper El-Nino ஏற்படுத்தவல்ல தாக்கங்கள்
முதலாவது ஒன்றை நாம் புந்துகொள்ள வேண்டும். இன்று நாம் 1876 ஆம் ஆண்டில் வாழவில்லை. அன்று இருந்த நிலைமையிலும் பாக்க 1000 மடங்கு அதி உன்னத விஞ்ஞான, தொழில்நுட்ப வளச்சியின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உலகில் போதியளவு உணவு கையிருப்பில் உள்ளது, செய்மதியைக் கண்ணாகக் கொண்டு பூகோளத்தை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகின்றோம், அறிவியலில் ஆல மரம்போல் உறுதியான வளச்சியை எட்டியிருக்கின்றோம். இந்த நிலைமை இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன் இருந்ததில்லை தானே! அதுவே 50 மில்லியனக்கு மேற்பட்ட மக்களின் இறப்புக்குக் காரணமாகியது. இன்று எப்படி ஒரு எல்-நினோ ஏற்பட்டாலும் அழிவு 5 லட்சத்தை எட்டுவதற்குக் கூட வாய்ப்பில்லை. ஆகவே இது குறித்து சமூக ஊடகங்களில் விதைக்கப்படுகின்ற பொய் வாத்தைகளால் பீதியடைய வேண்டாம். ஆனால் நம் அனைவருக்கும் ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. யாதெனில், உலகில் அசாதாரண நிலைமை ஒன்று உருவாகும் பொழுது அதிலிருந்து மீண்டு எழுவதற்கு (Resilience)  நாம் எப்பொழுதும் தயாராக வாழ்வதற்குப் பழகிக்கொள்ளுவதாகும். ஏனெனில், மனித வாழ்கை இவ்வுலகில் அனத்தங்களுக்கு இடையில்தான் அமைந்துள்ளது. அல்லது, அனத்தங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். ஆகவே அதற்கு ஒவ்வொருவரும் தம்மைத் தயாபடுத்திக்கொண்டு வாழ்வதுதான் இயற்கையின் விதி.   
இந்த Sper El-Nino எம்மை என்ன செய்யப் போகின்றது?  நாம் விழிப்புடன் இருந்தால் ஒன்றுமே செய்யப் போவதில்லை. நாம் வழிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்கு அப்பால், இத்தகைய அவசர கால நிலைமையில் அரசாங்கத்துக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. மக்களையும் நாட்டையும் அழிவுகளிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் மீட்பதற்கு முறையானதும், பொருத்தமானதுமான செயற்றிட்டக்ளைத் தீட்டி பிரதேச மட்டத்தில் மாவட்ட செயலகங்களுக்கு ஊடாக நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே தயாநிலையில் வைத்திருத்தல். அது இலங்கைக்குச் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் நாம், நமது பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலகாமல் இருப்பதே சிறந்தது. தற்போதுள்ள நிலைமையில் அரசாங்கம் விழிப்படைவதுதான் அதன் முதலாவது கடமை. அதற்குப் பிற்பாடுதான் மக்கள். 
பொதுவாகவே எல்-நினோ நிலைமை விருத்தியடைந்தால், முழு உலகமும் விழித்தெழுந்துவிடும். காரணம் அதனுடைய பாதிப்புகள் பூகோளம் சாந்தது. ஆனால், எல்-நினோக்கள் அனைத்தும் ஒரே மாதியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஓவ்வொரு எல்நினோவிலும் ஒருசில  நிலைமைகள் மிகத் தீவிர நிலையை எட்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, 1876/78 இல் மொன்சூன் மோசமாகப் பாதிக்கப்பட்டதனால் ஏற்பட்ட நீண்ட வரட்சி காரணமாக உணவுப் பஞ்சம் பிரதானமானதாகக் தலைதூக்கியிருந்தது. ஆசியாவில் ஏற்பட்ட வரட்சியின் கோரத்தை படத்தில் தௌவாகக் காண முடிகின்றது. அப்போது இலங்கை மிச மோசமாகப் பாதிக்ப்பட்டுளதனையும் படம் தெளிவாகக் காட்டுகின்றது (படம்-02).
1972/73 இல் மீன்பிடி, விவசாயம் பேரழிவைச் சந்தித்தது. 1982/83 இல் திடீர் வெள்ளங்களும், காட்டுத்தீயும் தீவிரமடைந்து காணப்பட்டது. 1997/98 இல் கடுமையான நீண்ட வரட்சியும், காட்டுத் தீயும் பிரதானமாகக் காணப்பட்டது. 2015/16 இல் வெப்ப அலையின் அபாயமும், சமுத்திரங்களில் முருகைக் கற்களின் வெளிறல் காரணமாக சமுத்திரங்களில் பாரிய அழிவைச் சந்தித்தது. 2026/27 இல் வெப்ப அலையின் அபாயமும், வரடசியும், வெள்ளமும் எதிபாக்கப்படுகின்றது. அதேபோன்று, எல்லா நாடுகளுக்கும் எல்லா விளைவுகளும் பொதுவானதாக அமைவதில்லை, ஆகவே ஒவ்வொரு நாடும் இதனால் தனக்கு என்ன தாக்கம் ஏற்படப்போகின்றது என்பதில் தெளிவு பெற்றுச் செயற்பட வேண்டும். அந்தவகையில் தற்போது உருவாகியுள்ள எல்-நினோ உலகின் பல பாகங்களுக்கு சவால் மிக்கதாக மாறியுள்ளது.
1.ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வெப்ப அலை அபாயம்.
2.தென்னாசியா, தென்கிழக்காசியா, அவுள்ரேலியா, மற்றும் இந்தோனேசியா போன்றவற்றில் கடுமையான வரட்சி.
3.தென்மேல் பருவமழை வெகுவாகப் பாதிக்கப்படும்.
4.ஐக்கிய அமொக்காவில் அத்திலாந்திக் காக்கேன் பருவம் பாதகமான நிலையை எட்டும்.
5.தென் அமொக்காவின் பேரு உள்ளிட்ட பிராந்தியங்களிலும், ஆபிக்காவின் கொம்புப் பகுதி (Horn of Affrica) என வணிக்கப்படுகின்ற எதியோப்பியா, சோமாலியா, எதித்தியா, கென்யா போன்றவற்றில் பாய வெள்ள அபத்து அதிகாக்கும்.
6.ஏனைய உலக பிராந்தியங்களில் வழமைக்கு மாறான அசாதாரண வளிமண்டல நிலைமைகள் பிரதிபலிக்கப்படும்.
இந்தியா, இலங்கை போன்றவற்றுக்கு நிலைமை எவ்வாறு அமையும் என்பதைத் தீமானிப்பதில் மாபெரும் சக்தி ஒன்று உள்ளது. அதுதான் IOD (Indian Ocean Dipole) இந்து சமத்திரத்தின் இவ் ஊசலாட்டத்துக்கு இரு முகங்கள் உண்டு. ஒன்று நேமறையான முகம், மற்றயது எதிமறையான முகம். IOD  நேமறையாக விருத்தி பெற்றால் எல்-நினோவின் தாக்கம் மொன்சூனைப் பாதிக்காது. அது எதிமறை நிலையில் விருத்தியடைந்தால் பருவக்காற்று மழையைப் பொதும் பாதித்தே தீரும். தேன்மேல் மொன்சூனில் குறைவும் (Deficiency), வடகீழ் மொன்சூனில் மேலதிகமும் (Surplus) ஏற்படும். இரண்டு நிலைகளுமே இலங்கைக்குப் பாதிப்பாகவே அமையும்.
இலங்கைக்குச் சாத்தியமான பாதிப்புகளும், மீட்ச்சிக்கான வழிமுறைகளும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் மீன்பிடி, விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றுடன் மொன்சூன் பருவங்கள் நேரடியான தொடபினை கொண்டுள்ளன. இத்தகைய பின்னணியில் இலங்கை அரசாங்கத்துக்கு பொறுப்பும், கடமையும் இருக்கின்றது. அதாவது, இந்நிலைமைகளை துறைசாH நிபுணகளுடன் ஆராய்ந்து, சவதேச காலநிலை முகவரகங்களுடன் இணைந்து நாளாந்த அவதானிப்புகளுக்கு ஊடாக இலங்கை குறிப்பாக என்னென்ன நிலைமைகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்திக்கொண்டு, அதனடிப்படையில் செயற்றிட்டங்களை விரைவுபடுத்தி மக்களையும், நாட்டையும் தயாநிலையில் வைத்திருத்தல் அவசியமாகும்.  
அந்தவகையில் காலநிலை சாந்த சர்வதேச முகவரகங்களின் அவதானிப்புகள், தரவுகள், ஆராய்ச்சிகள், கடந்த எல்-நினோக்கள் கற்றுத் தந்த பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ள Super எல்-நினோவினை இலங்கையுடன் தொடபுபடுத்திப் பார்க்கின்ற பொழுது இலங்கையிலும் அதனுடைய தாக்கம் சில வடிவங்கங்களுக்கூடாகப் பாதகமாக அமையலாம் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆகவே எமது கவனம், கடுமையான வரட்சி, திடீர் வெள்ளப் பெருக்கு, விவசாய உற்பத்தி வீழ்ச்சி, நீவளப் பற்றாக்குறை, சக்திவள நெருக்கடி, புயல்கள் போன்றவற்றில் விசேட திட்டங்களை உருவாக்குவதாக அமைவது அவசியம். ஆகவே, இவற்றை சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம், 
•போதுமான உணவினை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். 
•வுவசாயிகளை நஷ்டமடைவதிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அச் சமூகத்துக்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 
•விவசாயத்துக்கான மாற்று வழிமுறைகளை ஊக்குவித்து செயற்படுத்த வேண்டும். 
•அனத்த முகாமைத்துவ நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
•பிரதேச மட்டத்தில் மாவட்ட அனத்த முகாமைத்துவ நிலையங்களுக்கூடாக பல செயற்றிட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்த வழிகாட்டப்பட வேண்டும். 
•மக்கள் வழிபுடன் இருப்பதற்கும், செயற்படுவதற்கும் போதுமான நெறிப்படுத்தல்களை முன்னெடுக்க வேண்டும். 
•மாவட்ட தலைவர்கள் மத்தியில் வழிப்புணர்வினை ஏற்படுத்துதல் அவசியமாகும்.   
ஆகியவற்றில் கூடிய கவனத்தைச் செலுத்தி, பாதகமான நிலைமைகள் தீவிரமடைவதை தடுக்க முடியும்.