மட்டக்களப்பு மைலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் இலவச கண் மருத்துவ முகாமும் மூக்குக்கண்ணாடி இலவசமாக வழங்கும் நிகழ்வும்



 



















































































மட்டக்களப்பு மைலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் இலவச கண் மருத்துவ முகாமும் மூக்குக்கண்ணாடி இலவசமாக  வழங்கும் நிகழ்வானது  நேற்றைய தினம் 2026.02.28 அன்று   காலை உதவும் கரங்கள் ஒன்று  கூடல் மண்டபத்தில்     உதவும் கரங்கள்  இல்லத் தலைவரும்  மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான  சதாசிவம் ஜெயராஜா  அவர்களின் தலைமையில் இடம் பெற்றது .

 அவுஸ்திரேலிய புலம்பெயர் உறவான    விஷேட கண்வைத்திய நிபுணர் (ஸ்ரீ சத்தியசாயிசேவையில்) வைத்தியர் தர்மலிங்கம் மகேந்திரராஜாவின் பூரண அனுசரணையில்  இவ் மனிதநேய சமூகப்பணி முன்னெடுக்கப்பட்டது

 

 ஆ. நிர்மோகன் (கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு நிலை பதவிநிலை தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் )
திரு. கே. சந்திரலிங்கம் (கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலை நிர்வாகப்பிரிவு உத்தியோகஸ்தர் )
திரு. டீ. மகேந்திரன் (கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு நிலை தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் )
திரு. எ. பாஸ்கரன் (கிழக்குப் பல்கலைக்கழக பதவி நிலை தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் )
திரு. ஸ். பிரேம்குமார் (கிழக்குப் பல்கலைக்கழக பதவி நிலை தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்)
திரு. ஸ். தரணிஸ்வராணந்தா (ஓய்வு நிலை அதிபர் )
 ஆகியோர் நேற்றைய இலவச கண் வைத்திய முகாமில், உதவும் கரங்கள் நிறுவன, நிர்வாக குழுவினர்களுடன் இணைந்து  தன்னலமற்ற சமூகப்பணிக்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள் .


கிழக்கின் பல பகுதிகளில் இருந்து முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானவர்கள் இலவச கண் மருத்துவ முகாமுக்கு வருகை தந்திருந்தார்கள் .
கண் பார்வை , கண் நோய்கள், கண்புரை அறுவை சிகிச்சை அல்லது கூடுதல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு கண்வைத்திய நிபுணரால் ஆலோசனை வழங்கப்பட்டது .

நேற்றைய இலவச கண் மருத்துவ முகாமில் 160 பேருக்கு இலவசமாக   மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது .

குறிப்பிட்ட வைத்திய முகாமானது  காலை 9 மணிமுதல்  மாலை 4 மணிவரை இடம்  பெற்றது  

 

( இந்த சந்தர்ப்பத்தில் விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் டர்.தர்மலிங்கம் மகேந்திரராஜா  அவர்களைப்பற்றிய  சிறிய அறிமுகம் ஒன்றை எமது ஊடகம் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது 

 விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர்
Dr.தர்மலிங்கம் மகேந்திரராஜா  அவர் 
 ஒரு மூத்த கண் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார், 
இவர் மட்டக்களப்பு மகிழுர் கிராமத்தினை பிறப்பிடமாக கொண்டவர்.
இவர் மட். பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் முதற் தொகுதி க. பொத.உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர் ஆவார். 1975ம் ஆண்டு க. பொ. த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து , 1976ம் ஆண்டு திறமை அடிப்படையில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இருவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் Dr.தர்மலிங்கம் மகேந்திரராஜா அவர்கள் முதன்மையானவர். அந்த வகையில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவதுறைக்கு தெரிவு செய்யப்பட்டு MBBS பட்டத்தினை நிறைவு செய்தபின், சிட்னி கண் மருத்துவமனையில் பயிற்சியை முடித்தார்.
 கண் வைத்திய துறையில் விசேட மருத்துவராகி, மட்டக்களப்பு போதானா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை போன்றவற்றில் விசேட கண் வைத்திய நிபுணராக கடமையாற்றினார்.
பின்னர் அவுஸ்ரேலியா சென்று அங்கு 
 டார்வின்  மருத்துவமனையில் கண் வைத்தியம் நிபுணராக பணியாற்றுகிறார். கண்புரை அறுவை சிகிச்சை, மருத்துவ விழித்திரை, கார்னியல் நோய் மற்றும் கிளௌகோமா ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். 
கிராமப்புற மற்றும் தொலைதூர கண் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது, குறிப்பாக ஃப்ரெட் ஹாலோஸ் உடன் இணைந்து அறுவை சிகிச்சை இடம்: டார்வின் தனியார் மருத்துவமனை.

கிராமப்புற மற்றும் தொலைதூர கண் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும் பங்களித்துவருபவர். குறிப்பாக, கண்புரை, கிளௌகோமா, மருத்துவ விழித்திரை, கார்னியல் நோய்கள்கள் குணமாக்குவதில் நிபுணதத்துவம் பெற்றவர்.
ராயல் ஆஸ்திரேலியன் மற்றும் நியூசிலாந்து கண் மருத்துவர்கள் கல்லூரியின் (FRANZCO) உறுப்பினர்,

விருதுகள்: 
2008 'ஆஸ்திரேலியாவின் பெருமை' பதக்கம் வென்றவர் மற்றும் 2009 'ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியர் விருதும் பெற்றவர்.

ஆன்மிக துறையிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். அந்தவகையில் அவுஸ்ரேலியா டார்வின் நகரில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம், ஸ்ரீ சத்யசாய் நிலைய தலைவராக தன்னை ஈடுபடுத்திவருபவர்.)