பாலியல் வன்புணர்வு வழக்கில் 16 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகிய பின்னர் , மீண்டும் பிரிதொரு பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு 18வருட சிறை .

 


சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

16 வருடம் சிறை வாசம் அனுபவித்து வெளியில் வந்தவருக்கே மீண்டும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த மார்க் கலைவாணன் என்பவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் 16 வருடம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 2017-இல் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் சிறையில் இருந்து விடுதலையான சிறிது நேரத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணிப்பெண்ணை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கலைவாணனுக்கு 18 ஆண்டுகள் தடுப்பு காவல் சிறைத் தண்டனையும், 12 பிரம்படி வழங்கவும் உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.