30 நாட்களுள் 37 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட
களுதாவளை எனும் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனால் அங்கு ஒருவித பரபரப்பு நிலவுகிறது .
இதனையடுத்து அங்குள்ள பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்து ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.
களுவாஞ்சிகுடி
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் களுதாவளை பொது சுகாதார பரிசோதகர்
பிரிவில் கடந்த தை மாத காலத்தினுள் 37 இறப்புக்கள் ஏற்பட்டதாக கிடைத்த
சமூக ஊடக தகவல்களை தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையினையும் இறப்புகளுக்கான
காரணங்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் இவ்
ஆய்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
மரணம்
சம்பவித்த 37 வீடுகளுக்கும் சென்று வினாக்கொத்து வழங்கி தகவல்கள்
பெறப்பட்டன. எதனால் மரணம் இடம்பெற்றது என்ற காரணமும்
அறியப்பட்டிருக்கிறது.
இந்த சுகாதார கள ஆய்வானது மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
இக் கள ஆய்வில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் மே.வினோராஜ் மற்றும் உத்தியோகத்தர்கள்,
பொது
சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், களுதாவளை கிராம
சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து பங்களிப்பு
வழங்கியிருந்தனர்.
( வி.ரி.சகாதேவராஜா)



.jpg)
.jpg)







