மட்டக்களப்பு கல்லடி உப்போடை'' இரதிபதி'' அமரர் வீரக்குட்டி கணேசமூர்த்தி அன்னாரின் உபயத்தில் கல்லடி உப்போடை- நொச்சிமுனை ஸ்ரீசித்தி விநாயகர் , ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பஜனை குழுவுக்கு வாத்திய கருவிகள் வெள்ளிக்கிழமை 2026.04.24-மாலை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய சன்னிதானத்தில் அன்பளிப்பு செய்யப்பட்டன.
மேற்குறிப்பிட்ட ஆலயங்களின் பொது முகாமையாளர். க குருநாதன் அவர்களால் ஆலயங்களின் பஜனை குழுவுக்கு பொறுப்பான க. ஜேகேஸ்வரன் அவர்களிடம் வாத்திய கருவிகளை வழங்கி வைத்தார் .
இவ் நிகழ்வின் போது முன்னாள் முகாமையாளர் ந . ஹரிதாஸ் , ஆலயங்களின் தலைவர் க . கருணேஸ்வரன் , செயலாளர். சூ சுபேந்திரன், சி. அரியரெத்தினம் , வீ . விக்னேஸ்வரமூர்த்தி , அ.செந்தூரன், பூசகர் மற்றும் பஜனையில் பங்கேற்றுவரும் சிறுவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .
ஆலயத்தில் பஜனை செய்வது என்பது இறைவனை ஒருமித்த மனதுடன் கூடி வழிபடும் கூட்டுப் பிரார்த்தனை முறையாகும்.
இதனால் மன ஒருமைப்பாடு: இசையுடனும் தாளத்துடனும் பாடப்படும் பாடல்கள் சிதறிக்கிடக்கும் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றன.
கூட்டு சக்தி: பலரும் இணைந்து ஒரே மந்திரத்தையோ அல்லது பாடலையோ பாடும்போது அங்கு நேர்மறை அதிர்வுகள் (Positive Vibrations) உருவாகின்றன. இது தனிப்பட்ட வழிபாட்டை விட அதிக வலிமை கொண்டதாகக் கருதப்படுகிறது.
பக்தி மார்க்கம்: நவகிரகங்களின் வழிபாட்டில் 'சங்கீர்த்தனம்' அல்லது பஜனை என்பது இறைவனை அடைய எளிய வழியாகச் சொல்லப்படுகிறது. இது பக்தியை வளர்க்கவும், ஆணவத்தை அடக்கவும் உதவுகிறது.
மன நிம்மதி: கூட்டு வழிபாட்டின் போது எழும் ஓசை மற்றும் இசை, மூளையில் உள்ள பதற்றத்தைக் குறைத்து மன அமைதியைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .




























