நாட்டில்
உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில்
மாணவர்களுக்கிடையில் போதைப்பொருட்கள் பாவணை அதிகரித்து வருவதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே போதைப்பொருள்
தடுப்புப் பிரிவின் காவல்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோகா தர்மசேன
மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபல பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கைது நடவடிக்கையையும், போதைப்பொருள் பழக்கங்களும் சமீபக்காலமாக அதிகரித்து வருகின்றன.
அனைத்து
பாடசாலைகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தகத்தில்
ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அவசியமான சட்ட நடவடிக்கைகளை
எடுப்பதற்காக இலங்கை பொலிஸார் தற்போது சமூக பொலிஸ் அதிகாரிகளையும், சிவில்
புலனாய்வு அதிகாரிகளையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதன்படி,
"ரதம ஏக்தா" என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், 21 வயதுக்குட்பட்ட 8,459
நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பாடசாலைச் செல்லும் அல்லது
செல்லாத 21 வயதுக்குட்பட்ட 161 சிறுமிகளும் அடங்குவார்கள்.
இதேவேளை,
சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்கள், நகர்ப்புறங்களில் வாழும்
ஏழ்மை குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் ஆகியவர்களே இவ்வாறு
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
குறிப்பாக வெளிநாடுகளில் பெற்றோர்கள் இருக்கின்ற பிள்ளைகளும் இதில் அடங்குவார்கள்.
போதைக்கு அடிமையான இந்தக் குழந்தைகளை மறுவாழ்வு அளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்