2025 ஆண்டு உலக நோயாளி பாதுகாப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற வைத்திய சாலைகளுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் இடம் வைத்திய அதிகாரி வை. சகாயதர்சனி அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு சுகாதார சேவைகள் பணிமனை மண்டத்தில் கெளரவங்களை வழங்கி வைத்தார்.
கடந்த வருடம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பிரிவிற்குற்பட்ட வைத்திய சாலைகளுக்கிடையிலான உலக நோயாளி பாதுகாப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற வைத்தியசாலைகளுக்கான வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ்களை கிழக்கு மாகாண ஆளுநர் வழக்கினார்.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17 திகதி உலக நோயாளி பாதுகாப்பு தினத்தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வருட கருப்பொருளாக '' பிறந்த பச்சிளங்குழந்தை மற்றும் ஒவ்வொரு குழந்தைகளுக்குமான பாதுகாப்பான கவனிப்பு" எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது . பிறந்த குழந்தை முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, மருத்துவச் சிகிச்சைகளை சிறப்பாக வழங்குவதை உறுதிப்படுத்துவதை நோக்காக கொண்டு இந் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம் பெற்றன.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கான சிகிச்சையில், தவறுகளைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் தரமான மருத்துவ சேவையை உறுதி செய்ய இந்த தினம் வலியுறுத்துகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் தருத்து தெரிவித்த ஆளுநர் சுகாதார துறையினர் மிகுந்த சிரத்தையுடன் தமது சேவையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைக்கு இவ் வருடம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




































































