மட்டக்களப்பு கல்லடி உப்போடை அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியத்தினால் மடிக்கணனிகள் , மற்றும் சமூக நலன் சார்ந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு .

 



 




















 

 

































மட்டக்களப்பு   கல்லடி உப்போடை அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியத்தினால் அன்னாரின்  இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு     இன்றைய தினம்  பல்கலைக்கழகபொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட   இரண்டு மாணவர்களுக்கும்  ஹரி  சிறுவர் இல்ல நிர்வாக செயற்பாட்டிற்காக ஒரு மடிக்கணனியுமாக  மூன்று கணனிகள்     வழங்கி வைக்கப்பட்டது , 

தொழில் வாய்ப்பற்ற நபர் ஒருவருக்கு  வெளிநாட்டு வேலை வாய்ப்பு விசா  மற்றும்   பயணச் சீட்டுக்குரிய மொத்த செலவுக்குமான   சுமார் 7 லட்சம்    வழங்கப்பட்டது,  இதனை அவர் மீளச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டது 

அத்துடன் பாலமீன்மடு  விக்னேஸ்வரா வித்தியாலய   நூறாவது ஆண்டு நிறைவை  முன்னிட்டு  நடத்தப்பட இருக்கும் பேரணிக்காக  சிற்றுண்டி வழங்குவதற்காக இருபத்தாயிரம் 25000.00  ரூபாயும் , கடந்த வருடம் மருத்துவ துறைக்கு  தெரிவு  செய்யப்பட்ட  மாணவர் ஒருவருக்கு  மடிக்கணனிக்குரிய    பேனை (Digital Pen)வாங்குவதற்காக 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது .

இன்றைய தினம் வழங்கப்பட்ட  மடிக்கணணிகள் மற்றும்  கொடுப்பனவுகள் அனைத்துக்கும்  அன்னை லீலாவதி அறக்கட்டளைநிதிய ஸ்தாபகர் விமலநாதன் அவர்களினால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக  நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் நாயகம் வன்னிய சிங்கம் வாசுதேவன் அவர்களும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் ஓய்வு நிலை அதிபர்  திருமதி N. திலகவதி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் .
விமலநாதன் அவர்கள் மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்காகவும் , கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் , மற்றும்  இளைஞர்களுக்கு தொழில் வழங்குநராகவும் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது