மட்டக்களப்பு ஆரையம்பதி மட் /நவரெத்தின ராசா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு .

 


 















 
 
 








 


 மட்டக்களப்பு ஆரையம்பதி மட் /நவரெத்தின ராசா வித்தியாலயத்தில்  சித்திரை புத்தாண்டு நிகழ்வானது அதிபர் திரு. முரளிதரன் சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் மிக விமர்சையாக இடம் பெற்றது 

இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி. நிதர்ஷினி மகேந்திரகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன். விசேட அதிதிகளில் ஒருவரான மட்டக்களப்பு கல்வி வலயத்தின் அழகியல் துறைக்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர்  dr. திருமதி மலர்வழி சிவஞான சோதி குரு அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன். கௌரவ அதிதிகளாக ஆரையூர்  செல்வ விநாயகர் ஆலய தலைவர் மற்றும் ஏசியன் விளையாட்டு கழக தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர் மற்றும் சக பாடசாலை அதிபர்களும் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
 மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஏனைய சமூக உறுப்பினர்கள் அனைவரும் பங்கு கொண்டு அன்றைய தினத்தை விமர்சையாக கொண்டாடியதுடன் காலையில் தமிழர்  சித்திரை புத்தாண்டுக்கான கலாச்சார மற்றும் சம்பிரதாய நிகழ்வுகள் அனைத்தும் செய் முறையினூடாக மாணவர்களுக்கு கிரமமாக  செயல்படுத்தப்பட்டதுடன்.மாலை சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது. பாடசாலை என்பது கல்வியை மட்டும் புகட்டும் இடமாக அமைந்து விடக்கூடாது என்பதற்கும் நமது கலை கலாச்சாரங்கள் மற்றும் சமூக விழுமியங்களையும் ஒழுக்க விழுமியங்களையும் கற்றுத்தருமிடமாக அமைய வேண்டும் என்பதற்கு இப்பாடசாலையில் நடத்தப்பட்ட நிகழ்வானது பெரும் உதாரணமாகும். அந்த வகையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் விழிப்புணர்ம் சிரத்தை கொண்ட ஏற்பாடுகளும் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.