வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்” உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் சுவாமி விபுலாநந்தர் பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா – 2026

 






 ,






























































































வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில்  மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பினரின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா – 2026   முன்னெடுக்கப்பட்டது 

 உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும்,மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

கிழக்குப் பல்கலைக்கழக  சிரேஸ்ட விரிவுரையாளர், ,திருமதி. சரோஜினி மகேஸ்வரநாதன்     பிரதம அதிதியாகவும் ,   

 சிறப்பு  அதிதிகளாக 
  மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான உதவி கல்விப் பணிப்பாளர்  திருமதி. அனுரேகா விவேகானந்தன்   மற்றும்    பதவி நிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிழக்குப் பல்கலைக்கழகம்.அரிமா. ஏ. பாஸ்கரன்   அவர்களும் கலந்து கொண்டார்கள் .

 கௌரவ அதிதிகளாக 
திரு. ந. லோகேந்திரன் - ஓய்வுநிலை விரிவுரையாளர்,  
திரு. க. சிறிதரன் - ஓய்வுநிலை அதிபர் ஆகியோரும் 

 விசேட அதிதிகளாக 
திரு. ச. பிறேமானந்தன் - ஓய்வுநிலை ஆசிரியர்  
உப தலைவர், ஆலய பரிபாலன சபை, கல்லடி, 

  திரு. சா. புண்ணிய மூர்த்தி  - ஓய்வுநிலை ஆசிரியர்  
சிரேஸ்ட மொழிபெயர்ப்பாளர் ஆகியோரும் 

 அழைப்பு அதிதிகளாக 
கே. எஸ். ஆர். சிவகுமார் - கலாசார உத்தியோகத்தர், ஏறாவூர்ப்பற்று , 
கொம்புப் பிள்ளையார் ஆலய  தலைவர்,   திரு. வி. ரவிக்குமார் -   ஆகியோரும்  கலந்து சிறப்பித்தனர் . 

   ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை  தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன்   நிகழ்வுகள் வெகுசிறப்பாக ஆரம்பமானது .

 தொடர்ந்து மாணவர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றியீட்டியோருக்குப் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

     இந்நிகழ்வில்  பாடசாலை   சிறார்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள்,    பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.