மட்டக்களப்பில் எரிபொருள் வரிசை திடீரென உருவானது ஏன் ? பெரும் பரபரப்பில் மட்டக்களப்பு நகரம் .





பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென்ற அச்சத்தில்  மட்டக்களப்பு  மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர் ஆரையம்பதி, காத்தான்குடி, தாளங்குடா, கொக்கட்டிசோலை
 உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.

இதே வேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது  ஏற்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
 

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில்  எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட  தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது.

இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன