மட்டக்களப்பில் 15 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகம்!!


மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை (25) வாகரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை காதலித்துவந்த 18 வயது இளைஞன் திருமணம் முடிப்பதாக கூறி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து வாகரை பொலிஸாரால் குறிப்பிட்ட இளைஞனை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை சனிக்கிழமை (26) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.