இன்று (16) அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று அலாஸ்கா தீபகற்பப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது, இது அருகிலுள்ள பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க வழிவகுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பானது தெற்கு அலாஸ்கா, அலாஸ்கா தீபகற்பம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள பசிபிக் பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.