மட்டக்களப்பு மயிலம்பாவெளி குடிநீர் விநியோகத் திட்டத்தை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

 


மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமம் மற்றும் மயிலம்பாவெளி பகுதி மக்களின் நன்மை கருதி, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால் குடிநீர்
விநியோகத் திட்டம்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.


குடிநீர் இணைப்பு இதுவரை கிடைக்கப்பெறாத பகுதியை மையமாகக் கொண்டு, சுமார் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு குடிநீர் இணைப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.


நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


திட்டத்தை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.