மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் LOLC பினான்ஸ் கிளை காரியாலயம் இன்று 2025.07.11 காலை திறந்து வைக்கப்பட்டது.
கொக்கட்டிச்சோலை - LOLC பினான்ஸ் கிளை முகாமையாளர் ந.பிரசுதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்
பிரதம அதிதிகளாக LOLC பினான்ஸ் நிறுவன கிழக்கு மாகாண பிராந்திய தலைமை அதிகாரி floyd barthelot (ஃபிலாய்ட் பார்த்தலாட்) கலந்து கொண்டதுடன் கிளை காரியாலயத்தை சுப வேளையில் உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தார் .
கிழக்கு மாகாண பிராந்திய உதவி முகாமையாளர் - கௌதமன் ராமச்சந்திரன் , மன்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கிரேஸ்குமார், ஆகியோருடன் மட்டக்களப்பு LOLC கிளைகளை முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதிதிகள் வாத்திய மேளம்த்துடன் வரவேற்கப்பட்டதுடன், தேசியக்கொடி மற்றும் LOLC நிறுவனக்கொடி என்பன அதிதிகளால் ஏற்றப்பட்டதுடன் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து வணிகச் செயற்பாடுகளை ஆரம்த்து வைக்கும் முகமாக - லீசிங், நிலையான வைப்பு , தங்க கடன், நுண்நிதிக்கடன் என்பனவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது LOLC பினான்ஸ் நிறுவன கிழக்கு மாகாண பிராந்திய தலைமை அதிகாரி floyd barthelot (ஃபிலாய்ட் பார்த்தலாட்) உரையாற்றினார்.