
மட்டக்களப்பு நாவற்குடா படுகாட்டார் வீதி யில் ATIT நிறுவனம் பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் S. சிறீதரன்அவர்களால் 28.08.2025காலை திறந்து வைக்கப்பட்டது
இவ் நிறுவன திறப்பு விழா நிகழ்விற்கு பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் S. சிறீதரன் பிரதம அதிதியாகவும் , மட்டக்களப்பு மாநகர சபை பிரதி மேயர் தினேஷ்குமார் ,ஆதித்தி நிறுவன பணிப்பாளர் திருமதி.கீதா சுதாகரன் மற்றும் மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய அதிபர் M.H.M . அஸ்வத் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் பங்கேற்றிருந்தார்கள் .
திறப்பு விழா நிகழ்வில் நிறுவன ஆலோசகர்கள் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் ,மாணவர்கள், பெற்றார்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும்ATIT நிறுவனத்தினால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறுவர்களுக்கான அடிப்படை கணினி அறிவினை ஊக்குவித்தல் மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமை புரியும் விரிவுரையாளர்களின் அனுசரணையில்
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் புரிவோர்
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிலை எதிர்பார்ப்போர்
வீட்டிலிருந்தே கணினியுடன் தொடர்புடைய தொழில் ஒன்றை ஆரம்பிக்க விரும்புவோர்கள்,
கணினித்துறையில் தனித்துவமான அறிவினை பெற்றுக்கொண்டு அரச, தனியார் துறைகளில் மற்றும் வெளிநாடுகளில் உங்களுக்கு தகுந்த கணினித்துறை சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ள ATIT நிறுவனத்தில் இணைந்து கொண்டு பயன் பெறுவதோடு
மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பகுதி நேர கற்கை நெறி , முழுநேர கற்கை நெறி மற்றும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறையை பயனுள்ள விதத்தில் கற்றலுடன் பயன்படுத்த இலகுவான நேரம் அமைத்து கொடுப்பதற்கும் தவணை முறையில் கட்டணம் செலுத்த கூடிய வாய்ப்பை வழங்குவதாக தமது நன்றியுரையின் போது நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி வித்யா வசிகரன் தெரிவித்தார்
செய்தியாசிரியர்













































