செல்லச் சிட்டுக்களின் சிங்காரக் கொண்டாட்டத்தில் களை கட்டிய சாரதா பாலர் பாசாலையின் 55 ஆவது ஆண்டு நிறைவு விழா .

 


 



























































































 மட்டக்களப்பு கல்லடி   உப்போடை  ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 55 ஆவது ஆண்டு நிறைவு விழா 11.01.2026அன்று  கல்லடிஉப்போடை   சுவாமி விபுலானந்த  மணி மண்டபத்தில்  வெகு சிறப்பாக இடம்பெற்றது.


 "செல்லச் சிட்டுக்களின் சிங்காரக் கொண்டாட்டம்" எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீக  அதிதியாக    ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன்  உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி  உமாதீஷானந்தஜி   மகாராஜ் கலந்து கொண்டார்.

பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக கலாநிதி. திருமதி நிர்மலேஸ்வரி பிரஷாந்த் அவர்களும் ,  கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் அவர்களும்,   சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி கலா வித்தகர் திருமதி சசிகலா ராணி ஜெயராம் ,  மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் தி .மேகராஜ்  மற்றும் பாலர் கல்விப்பணியக வெளிக்கள உத்தியோகத்தர் பா .பரணிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். 

ஆரம்ப நிகழ்வாக   அதிதிகளுக்கு  மாலை   அணிவிக்கப்பட்டு பேண்ட்  இசை வாத்தியதுடன் வரவேற்கப்பட்டனர்.
தமிழர் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் , இறைவணக்கம் மற்றும் வரவேற்பு நடனத்துடன்   நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

 இதன்போது பாலர் பாடசாலை    சிறார்களின் கலாசார நடனங்கள் , பாடல், மும் மொழிகளிலும்  பேச்சு, கவிதை,   மற்றும்      புராண நாட்டிய நாடகங்கள், ஆங்கில நடனங்கள்  போன்ற பல்வேறு பாராம்பரிய கலைநிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்தன. ஆசிரியைகளின் கடின முயற்சிக்கு சபையோரின் கரகோசம் பரிசுமழையானது.
 சிறுவர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தமையுடன், பார்வையாளர்களையும் மிகவும் சந்தோசப்படுத்தியிருந்தமையையும் காணமுடிந்தது.

தொடர்ந்து அதிதிகளாக கலந்து கொண்ட அனைவருக்கும்   ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன்  உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி  உமாதீஷானந்தஜி   மகாராஜ் அவர்களால் நினைவுப்பரிசாக புத்தக பொதிகள் வழங்கப்பட்டன .

 கலை நிகழ்ச்சிகளில்  பங்கேற்ற செல்ல சிட்டுகள் அனைவரும்   அதிதிகளால்  நினைவுக் கேடயங்கள் (Shields) வழங்கி கௌரவைக்கப்பட்டார்கள் 

 பிரதேச வாழ் பொது மக்களும் , சிறார்களின் பெற்றோர்களும் நிகழ்வில் 
கலந்து கொண்டு சிறப்பித்தனர்

செய்தி ஆசிரியர்