மட்டக்களப்பு நொச்சிமுனை விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்க பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு .

 


 

 








   




















































மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம்  விழிப்புலனற்றோர் சங்கத்தின்  ஏற்பாட்டில் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு  சங்க மண்டபத்தில் அதன் தலைவர்  ப. டிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

 கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர்  கலாநிதி.புளோறன்ஸ் பாரதி கெனடி பிரதம விருந்தினராக கலந்துகொண்டார் .
 k.சர்வேஸ்வரன் ஆன்மீக அதிதியாகவும்,  சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் திருமதி சாந்தி கேசவன், மற்றும்  சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி பிரியதர்ஷினி ஜெகதீஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக்கல்லூரி அதிபர் M.சோமசூரியன்,   மட்டக்களப்பு சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் S. அருள் மொழி அவர்களும் பங்கேற்றிந்தார்கள்.

கலந்து சிறப்பித்த அதிதிகளால் விழிப்புலனற்றோர்
 சங்கத்தின் பயனாளிகளுக்கு   தைப்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகளும் புத்தாடைகளும் வழங்கி  உள்ளங்களை  உவகை கொள்ள வைத்தனர்.  

குறித்த புத்தாடைகளுக்கும் உலர் உணவுப்பொதிகளுக்கும் ஓய்வு நிலை பேராசிரிர் திருமதி சாந்தி கேசவன் அவர்களின் லண்டன் வாழ்  உறவுகளும்   சமூகபற்றாளர்களும் ,
சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி பிரியதர்ஷினி ஜெகதீஸ்வரன் அவர்களின் கனடா வாழ் உறவுகளும் சமூக சேவையாளர்களும், 
சமூக செயற்பாட்டாளர் லண்டன் சிவரூபன், 
மற்றும் கனடா வாழ் சுரேந்த்  ரஜனி , ரஜீவன்  லவ சுகன்னியா ஆகியோர்   இப்பாரிய மனிதாபிமானப் பணியினை முன்னெடுக்க நிதி   அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது .

உதயம்  விழிப்புலனற்றோர் சங்கத்தின் நீண்ட நாள் தேவைப்பாடாக சமையல் அறையும் , சாப்பிடும் அறையும் இருந்து வந்தது .அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு நிகழ்வின்  இறுதியில்  சங்க வளாகத்தில்   ஆன்மீக அதிதி k.சர்வேஸ்வரன்  குருக்கள் அவர்களின் பூஜை வழிபாட்டுடன் பங்கேற்ற அதிதிகளால்  அடிக்கல் நாட்டப்பட்டது  இங்கு விசேட அம்சமாகும்.
லண்டனில் வசிக்கும் வைத்தியர் S. பரமானந்தம் கட்டடம் நிர்மாணிப்பதற்கு  நிதி அனுசரணை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது 

 செய்தி ஆசிரியர்