தேசிய ரீதியில் சாதனை புரிந்த மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு-2026.01.09



 











































































 

தேசிய ரீதியில்  சாதனை புரிந்த  மட்டக்களப்பு   கல்லடி உப்போடை  விவேகானந்தா மகளிர் கல்லூரி  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு-2026.01.09-இன்றைய தினம் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் வெகு சிறப்பாக   இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக   அதிதிகளுக்கு  மாலை   அணிவிக்கப்பட்டு பேண்ட்  இசை வாத்தியதுடன் வரவேற்கப்பட்டனர்.
தமிழர் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் , இறைவணக்கம் மற்றும் வரவேற்பு நடனத்துடன்   நிகழ்வுகள் ஆரம்பமாகின.
 .ஆன்மீக அதிதியாக கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீல வானந்த ஜி மகராஜ் அவர்களும்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு  வலையக்கல்வி அலுவலக  பிரதி கல்விப் பணிப்பாளர்  திருமதி நிதர்ஷினி மகேந்திர குமார்  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு அதிதிகளாக திருமதி  பி. கஜேந்திரன்  விவேகா பழைய மாணவர் சங்கச் செயலாளர், ஸ்ரீ சித்தி விநாயகர் பேச்சி அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர்,மற்றும்  பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு .பிரதீஸ் ஆகியோர் பங்கேற்றார்கள். 
இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீல வானந்தஜி மகராஜ் அவர்களின் ஆசியுரையை தொடர்ந்து கல்லூரி முதல்வர் திரு ஸ். தர்முதாஸ்  தலைமை உரையாற்றினார் .

அதனைத் தொடர்ந்து கீழ் வழங்கப்பட்டுள்ள பெயர் பட்டியலின்படி    கலந்து சிறப்பித்த அதிதிகளால்  மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்   நினைவுக் கேடயங்கள் (Shields) வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது .
 

1.   தேசிய மட்டத்தில் கரம் விளையாட்டில்    தெரிவு செய்யப்பட்ட  மாணவர்கள்

கே.சஜித்தா 
R.ரிசாந்தினி  
A.மயூசாசினி
 P. சேவா
 K.அனுர்திக்கா
S.ஹரனி 

2. மேலும் தமிழ் தினப் போட்டியில்  பிரிவு 2 தேசிய மட்டத்தில் தனி நடனம்  மூன்றாம் இடத்தை பெற்ற மாணவி  ஜெ.  ஜெயரக்ஷா. 
 
3. கோலூன்றிப் பாய்தல் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட  அ.ரிஜேகா மற்றும்  கே. சஜிதா

4. சமூக விஞ்ஞான போட்டியில்  தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட  ஜே. பி ஜதுசாணி.

5. தை கொண்டோ தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் பி. அக்ஷரா.

6  .பொம்மலாட்டத்தில் தேசிய மட்டத்தில் பங்கு பற்றிய மாணவிகள்
R. வர்ணிகா 
P.வர்ஷவி
R.ஸ்ரீ ஷாக்ஷா  அ 
A.விஸ்மிக்கா  
V .திஹானி  
S.நிக் ஷயா 
 S.தர்ஷ்மிதா  
 K. சாத்வீகா 
S.கேஷ்மிதா

 7. தமிழ் தினம் மாகாண மட்டத்தில் தனி நடனம் மூன்றாம் பிரிவு இரண்டாம் இடத்தில் பெற்றவர் செல்வி ரி.சாத்விகா.

8. தேசிய மட்டத்தில் இலக்கணப்போட்டி S.ஹம்ஷிகா 

9. மல்யுத்த போட்டியில் தேசிய மட்டத்தில் பங்கேற்ற S. டனோமி.

10.  தனி நடனம் நான்காம் பிரிவு மாகாண மட்டத்தில்  பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்ற  N. றுவேதா. 

  11.  மல்யுத்தம் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் செல்வி கனிக்கா
 

 12. மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற  2025இல் சிறந்த மல்யுத்த வீராங்கனை செல்வி ரி. தர்மி .
---------------------------------------------------------------------------------------------------------------------- சர்வதேச ரீதியிலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த  ,  உடற்கல்வி ஆசிரியர், அகில இலங்கை மல்யுத்த பயிற்றுவிப்பாளர் திரு வி திருச்செல்வம் அவர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

கல்லூரி உதவி அதிபர் திருமதி N. சிவநாதன் அவர்களின்    நன்றியுரையோடு கௌரவிப்பு நிகழ்வு நிறைவு பெற்றது .   

 செய்தி ஆசிரியர்