சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தை சேர்ந்த 25பேருக்கும் மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்க அங்கத்தவர்களின்25 பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப் பைகள் விழிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் பங்கேற்றிருந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது
மட்டக்களப்பு
உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பி. டிசாந்தன் தலைமையில்
இடம் பெற்ற குறிப்பிட்ட நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களும் சிறப்பு அதிதிகளாக
களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் G.பாமதி , மாவட்ட
செயலக சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர் திருமதி S. கோணேஸ்வரன், மாவட்ட
செயலக சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர் S. அருள் மொழி அவர்களும், கௌரவ
அதிதியாக முன்னாள் விசேட கல்விப்பணிப்பாளர் முருகு தயானந்தன் மற்றும்
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை தலைவர் எஸ். இதயராஜன் அவர்களும் கலந்து
கொண்டார்கள் .
T.பகலவன் மற்றும் T.விநாயகமூர்த்தி நேசதுரை ஆகியோர் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகர்களாக பங்கேற்றுருந்தனர்.
.N.ஸ்ரீதேவி (தாதியர்), பிரித்திகா (தாதியர்) , வைத்தியர் தருஷணன், R. கிருஷ்ணகுமார் , Y.குகன் , வைத்தியர் G.பாமதி , உரிமையாளர் யூனிடேட் புத்தகசாலை , பன்னீர்செல்வம் , நோர்வே அன்டன் பாரதி ஆகியோர் கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப் பைகளுக்கு அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது .
EDITOR












































