மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய 2024ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

 

 


 






 




2024ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்திடைந்து பல்கலைகழகம் தெரிவாகிய மாணவர்கள், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 6A சித்திக்கு மேல் பெற்ற மாணவர்கள், தரம் 5புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டி, தமிழ் மொழித்தினப்போட்டி, ஆங்கில தினப்போட்டி, சித்திரப் போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, புத்தாக்கப் போட்டி ஆகியவற்றில் மாகாண, தேசிய மட்டத்தில் சாதித்த மாணவர்கள், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோர் பரிசில், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர். மேலும் பொதுப்பரீட்சையில் கூடிய சாதனைகளை வெளிக்காட்டிய பாடசாலைகளுக்கும் பாராட்டு பத்திரம் வழங்கி வைக்கப்பட்டன.

வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ந.தனஞ்சயன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ. திரேசகுமாரன், மண்முனை மேற்கு தவிசாளர் த.கோபாலபிள்ளை, வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் வை.சி.சஜீவன், தே.உதயகரன், தி.யசோதரன், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான க.ரகுகரன், உ.விவேகானந்தன், எஸ். சக்திதாஸ், தீபதர்சன் கணக்காளர் வி.கணேசமூர்த்தி, ஆசிரிய ஆலோசகர்கள் ஆலோசகர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன் போது மாணவர்களின் நிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டன.