
"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பினரின் புதுவருட விழா - 2026 நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும்,மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொதுவைத்திய நிபுணர் N.சத்திய சாகரன் பிரதம அதிதியாகவும் , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி விரிவுரையாளர் K.கமலநாதன் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி A. தயாசீலன் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற செயலாளர் P. முருகதாஸ் , யுனைடெட் புத்தகசாலை உரிமையாளர் P.செல்வராசா, மக்கள் வங்கி உத்தியோகத்தர் N.அன்னகேசரி அவர்களும்
அழைப்பு அதிதிகளாக ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் K.குருகுலசிங்கம், ஓய்வு நிலை உதவிக் கல்வி பணிப்பாளர் S. நவரெத்தினம், தலைவர் ஸ்ரீலங்கா சிறுவர் நிதியம் V.ராமநாதன் மற்றும் கல்லடி முதியோர் சங்கம் V.N. கணேஷானந்தம் ஆகியோர் பங்கேற்றனர் .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் வெகுசிறப்பாக ஆரம்பமானது .
இந்நிகழ்வில் மாணவர்களின் ஆடல், பாடல்கள், பேச்சு, கவிதை ,நாடகம் போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்
நிறைவில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப் பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அதிதிகளாக பங்கேற்ற அனைவருக்கும் உதவும் கரங்கள் அமைப்பினரால் பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
சிறப்பம்சமாக உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரால் அனைத்து அதிதிகள் , மாணவர்கள் பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் கைவிசேடம் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் பாடசாலை சிறார்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.
,உதவும் கரங்கள் பொருளாளர் (தாய்சேய் நல சுகாதார வைத்திய அதிகாரி) வைத்தியர் K.கிரிசுதன் அவர்களின் நன்றியுரையுடன் புது வருட விழா இனிதே நிறைவுற்றது
EDITOR





























































































































































