மட்டக்களப்பு தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரிசோன் ரோபட்சோழன் உலக சாதனை.

 
























































பெட்டி வடிவ 100 கூட்டல் மற்றும் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடங்கள் மற்றும் 10 நொடிகளில் தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்த மட்/ தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரிசோன் ரோபட்.

மட்/தாழங்குடா றோமன்  கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவன் ரிசோன் ரோபட்,
பெட்டி வடிவ 100 கூட்டல் மற்றும் 100 கழித்தல் கணக்குகளுக்கு தீர்வெழுதி  சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சில் ஈடுபட்டார்.

இந்த முயற்சியானது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த இன்பராசா மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர் அ.தனுராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 

நடுவர்கள் முன்னிலையில் மாணவன் ரிசோன் ரோபட் 2 நிமிடங்கள் மற்றும் 10 நொடிகளில் குறிப்பிட்ட 200  கணக்குகளுக்கு தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்தார்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்ட அருட்தந்தை நவாஜி நவரட்ணம், மற்றும்  அருட்தந்தை ஜெ.மாஷல்,
அருட்தந்தை பி.சுகந்தன், அருட்தந்தை எஸ். ஜெயநிக்சன், அருட்தந்தை ஏ.அன்பு, அருட்சகோதரி எஸ்.தவசீலா மற்றும் கௌரவ விருந்தினர்களான  மட்டு/ தாழங்குடா றோமன் க.த.க பாடசாலையின் பதில் அதிபர் ஏ.சுதாகரன், மற்றும் முன்னால் அதிபர் திரு பு.யுவதாஸ் இணைந்து வழங்கிக் கௌரவித்தனர்.

மாணவனின் தந்தை திரு.ரொபர்ட் வரவுற்புரை நிகழ்த்திய அதேவுளை தாயார் திருமதி.ஞானமலர் நன்றியுரை தெரிவித்தார்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவனை உறவினர்கள் நண்பர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.