கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின் படி:
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் நிகழ இருக்கின்ற இடமாற்றங்களின் நிமித்தம் மட்டக்களப்பின் மிக பின் தங்கிய மட்டக்களப்பு மேற்கு, மற்றும் கற்குடா கல்வி வலயங்கள் மிகுந்த ஆளணி பற்றாக்குறையை வருகின்ற ஆண்டில் எதிர் நோக்க உள்ளது....
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்
வெளியேறுதல் - 86
உள் வருதல் - 06
கல்குடா கல்வி வலயம்
வெளியேறுதல் - 97
உள் வருதல் - 05
மட்டக்களப்பு கல்வி வலயம்
வெளியேறுதல் - 04
உள் வருதல் - 133
பட்டிருப்பு கல்வி வலயம்
வெளியேறுதல் - 25
உள் வருதல் - 26
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்
வெளியேறுதல் - 10
உள் வருதல் - 33
இவ் வருடாந்த ஆசிரியர் இடமாற்றமானது அரசாங்க சுற்று நிருபங்களுக்கு ஏற்ப பொருத்தமான இடமாற்றம் பெறுவதற்கு தகுதியுடைய ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு இடமாற்ற சபைகளின் ஊடாகவும் ஆசிரிய சங்கங்களின் மேற்பார்வையின் கீழ் வருடா வருடம் நடைபெறுகின்ற ஒரு செயல்முறையாகும் என்பதுடன் எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல் இவருடம் நடைபெற்றதாகவும் அறிய கிடைக்கின்றது....
ஆனாலும் மட்டக்களப்பின் மிக பின் தங்கிய மட்டக்களப்பு மேற்கு, கற்குடா கல்வி வலயங்களிலிருந்து பாரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் வெளியேறுவது என்பதானது இவ் கல்வி வலயங்களில் பாரிய பின்னடைவை உண்டு பண்ணும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது.





